ஆட்டுடன் தவறான உறவு கொண்ட இளைஞர் கைது : மருத்துவ பரிசோதனையின் பின் சந்தேக நபரை அடையாளம் காட்டிய ஆடு
ஆப்ரிக்க நாடான கென்யாவில், ஆட்டிடம் தகாத உறவுகொண்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கென்யாவின் மலிந்தி நகரைச் சேர்ந்தவர் கடனா கிட்சவோ கோனா, வயது 28. இவர் மதிய வேளையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
கடும் வெயில் தாக்கத்தால், சற்று ஓய்வெடுப்பதற்காக சாலை ஓரத்தில் இருந்த மர நிழலில் ஒதுங்கினார். அங்கு ஒரு ஆடு கட்டப்பட்டு இருந்தது.
தனிமையில் இருந்த ஆட்டைக் கண்ட மலிந்தி அதனிடம் தவறாக நடந்து கொண்டார். தகாத உறவால் வலி தாங்காமல் ஆடு கத்தியது. ஆட்டின் அலறல் சத்தம் கேட்ட பெண் ஒருவர் மலிந்தியின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஆட்டின் உரிமையாளரிடம் இதை தெரிவித்தார். ஆட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மலிந்தியை பொலிசார் கைது செய்தனர்.
பின் விசாரணைக்காக மலிந்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மலிந்தி ஆட்டிடம் உறவு கொண்டாரா என்பதை உறுதி செய்ய ஆட்டுக்கு கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனையின் முடிவில் ஆடு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மலிந்தி தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்ததால் பொலிசார் பாதிக்கப்பட்ட ஆட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். மலிந்தியுடன் மேலும் சில நபர்கள் ஆட்டின் முன் நிற்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஆடு மற்றவர்களைத் தவிர மலிந்தியையே உற்றுப் பார்த்தது.
கால்நடை மருத்துவர் வழங்கிய மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் ஆடு மலிந்தியையே உற்றுப் பார்த்த விதம் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு மலிந்தியை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்தது.
அப்பாவி ஆட்டிடம் தவறாக நடந்து கொண்ட மலிந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தன் மனைவி, மாற்றுத் திறனாளி என்றும் அவரால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பதால் தன்னை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் மலிந்தி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் நீதிபதி மலிந்தியின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
0 comments :
Post a Comment