மெக்சிக்கோவில் இலங்கையர்கள் ஐவர் கைது!
மெக்சிக்கோவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் பெண் ஒருவரும் அடங்குவர்.
குறித்த ஹோட்டலில் இவர்கள் ஐவரும் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்துள்ளனர். 34 வயதான சந்திரிகா நிரோஷன், 31 வயதான தூரந்திங்க நிரோஷன், மற்றும் 27 வயதான சிவபாதம் மற்றும் 10, 5 வயதான சிறுவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு ஆவணங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது தம்மிடம் அவ்வாறான ஆவணங்கள் எதுவும் இல்லை என இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment