Monday, December 16, 2013

ஆண் அழகன் போட்டியில் மிஸ்டர் ஸ்ரீலங்கனாக புஸ்பராஜா தெரிவானார்!

66 ஆவது தடவையாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் கத்டான பெலமேன் விழையாட்டு கழகத்தைச் சேர்ந்த அன்டன் புஸ்பராஜா சகல துறைகளிலும் வெற்றி பெற்று மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவானார்.நேற்று இடம் பெற்ற இந்த ஆணழகன் போட்டியில் 125 போட்டியாளர்கள் பங்குகொண்டனர்

முதலாம் இடத்தை அன்டன் புஸ்பராஜாவும், இரண்டாம் இடத்தை கடற்படையைச் சேர்ந்த சுபாஸ் சிறிவர்த்தனவும், 3ம் இடத்தை இராணுவத்தைச் சேர்ந்த யூ ஜே அமில வும், பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற போட்டயாளர்களுக்கான பரிசில்களை பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, விளையாட் டுத்துறை இயக்குனர் ஆகியோர் வழங்கினர்.

2 comments :

Anonymous ,  December 16, 2013 at 9:47 PM  

பாருங்கள் என்னளவு முன்னேற்றம்! சிறுவர்களுக்கு சயனைட் கொடுத்த கருணா தற்போது பரிசில்களை கொடுக்கின்றான். இவ்வாறே இந்த வீணாய் பேன த.தே.கூ வம் திருந்தும் என்றால் தமிழர்களுக்கு உள்ள பிரச்சினை ஒரளவு குறையும்.

Arya ,  December 16, 2013 at 11:33 PM  

புஸ்பராஜாவுக்கு வாழ்த்துகள் , கருணா திருந்தியது போல் பிரிவினை பேசும் சகல தமிழர்களும் திருந்தி நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல வேண்டும், புலன் பெயர்ந்த புலி பினாமிகளின் பேச்சை கேட்டு , நாளைய இலங்கை சரித்திரத்தில் தமிழர்கள் இந்நாட்டின் சாபக்கேடாக இருந்தார்கள் என எழுத இடமளிக்க கூடாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com