க.பொ.த சாதரண தரப்பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிபர் மரணம்!
கிளிநொச்சி அக்கராயன் ஆரம்ப வித்தியாலயத்தில் க.பொ. த சாதரண தரப்பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த 47 வயதுடைய அதிபர் ஒருவர் இன்று (10.12.2013) செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 02.20 மணியளவில் தனது உடலில் ஏதோ செய்கின்றது எனக்கூறிய அதிபர் பசுபதி கணேசமூர்த்தி சில நிமிடங்களில் உயிரிழந்ததாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ள இதேவேளை, இவருடன் சேர்ந்து இரவு உணவு உட்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி அதிபர் திங்கட்கிழமை இரவு உண்ட உணவு விஷமானதால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலமோ என சந்தேகம் தெரிவிக்கப்படுவதுடன் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment