யாழ். ஏழாலையில் கைக்குண்டுகள் மீட்பு!
யாழ். ஏழாலை கிழக்கு புனித இசிதோர் பாடசாலைக்கு அருகிலுள்ள காணியிலிருந்து 6 கைக்குண்டுகள் காணப்படுவதாக இன்று(03.12.2013) செவ்வாய்க்கிழமை காலை பொதும்கள் கிராம அலுவலர் ஊடாக சுன்னாகம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக துரிதகதியில் செயல்ப்பட்ட சுன்னாகம் பொலிஸார் ஊரெழு இராணுவத்தினருடன் இணைந்து கைக்குண்டுகளை மீட்டுடதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment