வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவுத் திட்டத்தை திட்டமிட்டு தமிழரசுக்கட்சியா தோற்கடித்தது?
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று தவிசாளர் ந.அனந்தராஜ் (ஈபிஆர்எல்எப்) தலைமையில் கூடிய பொழுது மிக அமைதியான முறையில் எல்லா உறுப்பினர்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் உரையாற்றிய பின் வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்த பொழுது,
உடனடியாக தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் நகர சபை உறுப்பினருமான எஸ்.எக்ஸ்.குலநாயகம் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தான் நிராகரிப்பதாகக் கூறி அது தொடர்பான பிரேரணையை முன் மொழிய இன்னுமொரு உறுப்பினரான கோ.கருணானந்தராசா அதனை வழிமொழிய குலநாயகத்தினால் சபைக்கு அழைத்து வரப்பட்ட உப தலைவர் க.சதீஸ், ம.மயூரன், க.சிவாஜிலிங்கத்திற்குப் பதிலாக நேற்றைய தினம் தான் முதல் தடவையாகச் சரூகமளித்திருந்த ச.பிரதீபன்ஆகியோர் அவரது பிரேரணைக்கு ஆதரவாகவும், க.ஜெயராஜாவும், தலைவரும் பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்தமையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்பட்டது.
இதில் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரும் நடு நிலைமை வகித்தனர். எஸ்.எஸ்.குலநாயகம் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்துப் பேசிய பொழுது தலைவர் வரவு செலவுத் திட்டத்தை நிராகரிப்பதற்கான காரணத்தை தெளிவு படுத்துமாறு கூறி, அதனைத் தயாரிக்கும் பொழுதும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கு பற்றாது இருந்ததுடன் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எந்த வித முன்மொழிவுகளையும் தராது இருந்து விட்டு ஒருநாள் மட்டும் வருகை தந்தவுடன், அதனை நிராகரிப்பதாகக் கூறுவது தவறானது என்று கூறியதும், எஸ்.எஸ்.குலநாயகம், உப தலைவர் க.சதீஸ், கோ.கருணானந்தராசா மூவரும் ஒருமித்த குரலில் வரவு வரவு செலவுத் திட்டம் தொடர்பான குறைபாடுகளைக் குறிப்பிடாது தமது செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகளைக் கொடுப்பதால் தாம் இதனை நிராகரிப்பதாகக் குறிப்பிட்டனர்.
அதேவேளை ம.மயூரன் ஏற்கனவே முன்மொழிவுகளைக் கொடுத்ததுடன் வரவு செலவுத் திட்ட ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமாகச் செயற்பட்டதுடன் அவரது ஆலோசனைகள் பல வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளரான எஸ்.எஸ்.குலநாயகம் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்திருந்த நிலையில், இரண்டு நாட்களின் முன்னர் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில்உள்ள உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்தால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கருதி அத்தகைய உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தலைவர் நினவூட்டிய பொழுது மாவை எங்களை என்ன செய்வார் என்று கூறிய ம.மயூரன் வாக்கெடுப்புக்கு விடத்தான் வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததனால், இப் பிரேரணையை வாக்களிப்புக்கு விட்டதாக தலைவர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராலேயே தோற்கடிக்கப்பட்டதால், தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடம் எடுக்கும் முடிவை அடுத்து வரவு செலவுத் திட்டம் தொடர்பான அடுத்த வாசிப்பு தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு இலஞ்சம், மற்றும் மோசடிகளில் ஈடுபடுவதற்கு எவருக்கும் துணை நிற்கப் போவதில்லை என்றும் தலைவரால் தெரிவிக்கப்பட்டு கட்சியின் தலைமைப் பீடம் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ் நகரசபையின் தலைவராக ஈபிஆர்எல்எப் பட்சியினைச் சேர்ந்தவரே உள்ளார். இதனால் இவரை வெளியேற்றும் நோக்குடனயே தமிழரசுக்கட்சி திட்டமிட்டு இதனை தோல்வியடையச் செய்ததாக அறிய முடிகிறது. ஏற்கனவே வலிகாமம் பகுதியில் ஈபிஆர்எல்எப் கட்சியியைச் சேர்ந்த ஒருவர் தலைவராக உள்ள பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
குரங்குகள் கையில் பூமாலை கொடுத்த மாதிரி உதுகள் நகரசபையை நடத்துதுகள்.
கேடு கெட்டதுகள் மக்கள் நலனை விட தங்கள் அரசியல் நலம் கருதி மட்டுமே செயல்படுகிதுகள்.
இப்படிப்பட்ட களிசறைகளால் எம் மக்களுக்கு பாதிப்புகள் தவிர எவ்வித பிரயோசனமும் இல்லை.
தமிழீழம் என்று பிரித்து கொடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
Post a Comment