கீதாவை பதவியில் இருந்து விலக்கவேண்டும் - ஐவர் உண்ணாவிரத போராட்டம்!!
கீதாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலக்ககோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எல்பிட்டி பஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்படு கின்றது.
தென் மாகாண உறுப்பினர் அஜித் பிரசன்ன, கீதா குமாரசிங்கவை தகாத வார்த்தை களால் திட்டியதாகவும், அதற்கு பதிலாக கீதா குமாரசிங்கவும் திட்டியதாகவும், இதனையடுத்து தென் மாகாண உறுப்பினர் அஜித் பிரசன்ன, எல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான நலின் பிரியதர்ஷன, சரத் அல்விஸ், ஏ.ஜி.சாகர திலக, டி.சுமத் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அமைச்சர் குணரத்ன வீரகோன் தலைமையில் இடம்பெற்ற எல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் கீதா குமாரசிங்க பங்குபற்றியதை அடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment