சட்டப்படி திருமணம் செய்யாது இளைஞருடன் இணைந்து வாழ்ந்த சிறுமி தற்கொலை!!
சியம்பலாண்டுவ பகுதி வீடொன்றில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இவர் சட்டப்படி திருமணம் செய்யாதவர் எனவும் அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் இணைந்து வாழ்ந்தார் எனவும் தெரிய வந்துள்ளது.நேற்றையதினம் (04) குறித்த இளைஞர் வீட்டில் இல்லாத சமயம் இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மரணத்துக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சியம் பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment