Saturday, December 21, 2013

பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது – பிரதமர்

புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்ட திட்டங்களை அமுல்படுத்தலாம். ஆனால் அமைக்கப்பட் டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக் கைகளிலும் பொலிஸார் தலையிடக்கூடாது என்று பிரத மரும் பௌத்தசாசன மதவிவகார அமைச்சருமான டி.எம். ஜயரத்தின உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு தெகிவளைப் பிரதேசத்திலுள்ள 3 பள்ளிவாசல் களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடைவிதித்திருந்தனர். அத்துடன் தெகிவளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருல் சாபி பள்ளிவாசல்மீது இனந்தெரியாத நபர்கள் புதன்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எம்.பி.க்கள் நேற்று பிற்பகல் பிரதமர் டிஎம். ஜயரத்தினவைச் சந்தித்து தமது விசனத்தை தெரிவித்திருந்தனர். இந்தச் சந்திப்பின்போதே பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது என்ற உத்தரவை பிரதமர் பிறப்பித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com