Thursday, December 19, 2013

இராவணன் முஸ்லிமே! அடித்துச் சொல்கிறார் முபாரக் மௌலவி!

இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்கள வரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வரலாறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்த நிலையில் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த இராவணன் எப்படி சிங்களவனாவான்?

உண்மையில் இஸ்லாம் இந்து, பௌத்த மதங்களுக்கு முற்பட்டது என்பதாலும் முதல் முஸ்லிமும் முதல் மனிதனுமான ஆதம் இலங்கையில்; இறங்கி அவரின் வாரிசுகள் இங்கேயே வாழ்ந்தனர் என்பதனாலேயே ஆதம் வாரிசு என்ற அறபுச்சொல் ஆதிவாசியாக மருவியுள்ளதை காணலாம். அத்துடன் இலங்கை இந்திய எல்லையில் அழிந்து போன பாலத்தை ஆதம் பாலம் என்றே அங்கில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்பாலத்தின் வழியாகவே ஆதம் மக்கா சென்று திரும்பினார். சேது பாலம் என தமிழில் அழைக்கப்படும் பெயர் கூட சீது என்ற இறைத்தூதரின் பெயராகும் என்பதை இஸ்லாம் கூறுகிறது.

அதே போல் இராவணன் சம்பந்தப்பட்ட வரலாற்றுக்கதையில் வரும் பெயர்களான ராவணன் என்பது அரசன் என்ற பொருள் கொண்ட ராஇனன் என்பதும் ராமன் என்பது ரஹ்மான் என்பதும் சீதா என்பது சய்யிதா என்பதையும் அனுமான் என்பது நுஃமான் என்பதையும் வாலி என்பது அதே அறபுச்சொல் மூலம் பாவிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இந்தப்பெயர்களுக்கும் இந்து, பௌத்த பெயர்களுக்கும் எந்தவொரு நெருக்கத்தையும் நாம் காண முடியாது. மாறாக அறபு மொழிக்கே மிக மிக நெருக்கமாக உள்ளன.

ஆக ராம் மற்றும் ராவணன் வரலாறு என்பது முஸ்லிம்களின் வரலாறாகும். காலப்போக்கில் இந்த வரலாறு திரிபு படுத்தப்பட்டு இந்துக்கள் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வாறு மோசே என்ற மூசாவை பின்தொடர்ந்த முஸ்லிம்கள் அவர் இல்லாத போது காளை மாட்டை வணங்கி இந்துக்காளாக மாறினார்களோ அவ்வாறே இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்துக்களாக, பௌத்தர்களாக மாறியுள்ளனர். ஆகவே இலங்கை ஆதி காலத்தில் முஸ்லிம்களின் தாயகமாகவே இருந்துள்ளது என்பதை எம்மால் உறுதிபட கூற முடியும் என முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்தார்.

(எஸ்.அஷ்ரப்கான் )

11 comments :

Anonymous ,  December 19, 2013 at 3:31 PM  


எம் நாட்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளது நைனா!.
அநீதி, ஊழல், லஞ்சம், சர்வாதிகாரம், பசி, வறுமை, விலைவாசி, வேலை வாய்ப்பின்மை, மதவாதம், இனவாதம், அரசியல் அட்டகாசம், அடாவடித்தனங்கள், இராணுவ ஆட்சி, மாபியா, பாதாள உலகம், போதைவஸ்து பெருக்கம், கடத்தல், கப்பம், தெரு சண்டிகள் என்று நிறைய பிரச்சனைகள் தலை வரித்து ஆடுகின்றது. இதைபற்றிய சிந்தனை, கரிசனை அரசியல் மற்றும் மதவாதிகளுக்கு கிடையாது.
நாடு பாதாளம் நோக்கி போய்கொண்டிருக்கிறது,......
ஆனால், இராவணன் யார்?
இதுவல்ல எமது பிரச்சனை.

Anonymous ,  December 19, 2013 at 5:19 PM  

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி ராஜபக்சவுக்கு இவ்வாறான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. தற்போது நாடு மிகவும் அமையானகவும் இனங்கள் ஒன்றுமையாகவும் வாழ்வதை பொறுக்கமுடியாத சில தீய சக்திகள் அவ்வாறான மத சார்பான கருத்தை முன்வைக்கின்றன. எல்லாம் போக போக சரிவரும் அதொல்லாத் தங்களை பிரபல்லமாக்குவதற்காக வெளியிடும் கருத்துக்கள்.

கரன் ,  December 19, 2013 at 5:26 PM  

மௌலவி அவர்களே! இராவணன் சோனகன் என்று சொல்லத்தெரிந்த உங்களுக்கு இராவணனுக்கு எங்க தொங்கல் வெட்டினது என்று சொல்ல முடியுமா?

Anonymous ,  December 19, 2013 at 6:01 PM  

சகோ கரன் அவர்களே முஸ்லிம்களுக்கு தொங்கல் வெட்டுவது என்பது சுன்னத்தானே காரியமே அன்றி கட்டாய கடைமை அல்ல. அதற்காக நான் இராவணன் முஸ்லிம் என்று
குறிப்பிடவும் இல்லை.

Anonymous ,  December 19, 2013 at 6:13 PM  

சகோ கரன் அவர்களே! முஸ்லிம்களுக்கு தொங்கல் வெட்டுவது என்பது சுன்னத்தானே காரியமே அன்றி கட்டாயே கடமை அல்ல. அதற்காக வேண்டி நான் இராவணன் சோனகன் என்று குறிப்பிடவில்லை.

Unknown December 19, 2013 at 6:57 PM  

மொலவி அவர்களே கொதம புத்ர் பிறந்து எவளவு காலம் யேசு பிறந்து எவளவு காலம் நபி பிறந்து எவளவு காலம் என்று இந்துகளுக்கு மடடுமே காலம் குறிப்பிடவில்லை காரணம் இந்து மதம் என்பது தேன்றிய காலம் தெரியாது

என்பதுடன் குர்ஆன்,பைபிள்,மற்றும் பௌத்த மத வரலாற்று நுல்களின் பகுதில் வடிவாக வாசிததுப்பாருங்கள் மௌலவி அவர்களே அனைத்து மதமும் ஒரு மதத்தில் இருந்து தொன்றியது என்றும் அந்த மதத்தின் காலம் ஏதம் தெரியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தற்போது இலங்கை பௌத்த நாடா, இந்து நாடா, முஸ்லீம் நாடா, கிறிஸ்தவ நாடா என மண்டும் இனவாத யுத்தம் முடிந்து இனி மதவாத யுத்தம் ஒன்று ஆரம்பிக்க முனையாது நாட்டின் அபிவிருத்திக்கும் இன மத ஒற்றுமைக்காகவும் பாடுபடுங்கள் தேவையில்லாத கதைகளை கதைத்து இன, மத ஒற்றுமைய குளப்ப வேண்ண்டாம்

செல்லக்குமார் ,  December 19, 2013 at 7:47 PM  

ஏன்ன வாப்பா உம்மாகிட்ட செல்லிக்கா வந்தா? நீ நாளைக்கு சொல்லுவாய் இலங்கை ஒரு முஸ்லிம் நாடு அந்த முஸ்லிம் நாட்டில் குடியேறியவர்கள் தான் தமிழரும் சிங்களவரும் என்று. எதை யாரு சொல்ல என்று தெரியாது? முஸ்லிம் மதத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையோ உள்ள வித்தியாசம் தெரியாமல் அடித்து சொல்லுறாராம் அடித்து! வாயை நல்லா அடித்து கழுவு

Anonymous ,  December 19, 2013 at 7:52 PM  

எல்லாமே முடிந்து தற்போது இந்து மதததையுமா மௌலவி உரிமை கொண்டாட ஆயத்தமாகின்றார். மௌலவிக்கு சுனனத் மட்டும் போதாது அதற்கு மேலயும் வெட்ட வேண்டும்.

Abdulla ,  December 19, 2013 at 10:54 PM  

இவன் உலக மஹா முட்டாள் அல்லது இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது , அல்லது இவனுக்கு முஸ்லிம் பயங்கர வாதிகளுடன் தொடர்பு இருக்கலாம், இவனை பிடித்து ஜெயிலில் அல்லது அன்கோடையில் போடவும்.

இலங்கை பௌத்த நாடா, இந்து நாடா, முஸ்லீம் நாடா, கிறிஸ்தவ நாடா என மண்டும் இனவாத யுத்தம் முடிந்து இனி மதவாத யுத்தம் ஒன்று ஆரம்பிக்க முனையாது நாட்டின் அபிவிருத்திக்கும் இன மத ஒற்றுமைக்காகவும் பாடுபடுங்கள்

Anonymous ,  December 20, 2013 at 1:14 AM  

Dear Mowlana,

You are a one of the Musleem reliegus head in Sri Lanka.

Please dont make any differrant kind of missundrestanding within Sri Lankans!

Our President or Our politiciens have to do so much work to bring you all together and you all to be a unity!!

This is the world. Please try to be a head, like all people fallowing with you to get our country all people together!!

Kindly ask you to - do not work, like TNA politiciens,LTTE and LTTE diasporas with Mano Ganeshan group.

leave people to choose thare own mineded solutions! but you do not distrub people with RASSISM!!!!

This is not good for religus leaders! T

Anonymous ,  December 20, 2013 at 1:18 AM  

Mannar AAyar Rayappu Joseph also like you!!

Where you all are interested to make and give much of problems for government.

We know well that: Rayappu Joseph are LTTE Father! but you?? UNP????????

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com