இலங்கை பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்கு இந்தியாவிற்கு ஓடிய கல்முனையைச் சேர்ந்த நபர், இந்தியாவில் கைது!
கல்முனையைச் சேர்ந்த 30 வயதுடைய சாந்தரூபன் என் பவர் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச் சாட்டிற்காக இந்திய கடற்கடையினரால் கைதுசெய்யப் பட்டு தனுஷ்கோடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு ள்ளதாக, இந்திய கடற்கடையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இந்திய கடற் படையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது,
அவர் பொலிஸாரிடம் தொரிவிக்கையில், தான் அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, த.தே.கூ,க்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், அதன் போது தேர்தல் பிரசாரத்தில் மற்ற தரப்பினருடன் தகராறு ஏற்பட்டதாகவும், இதையடுத்து என்னை இலங்கைப் பொலிஸார் தேடியதால் தலைமறைவாக இருந்த நிலையில், எனது தம்பியை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும், இதனால தான் இலங்கையிலிருந்து தப்பி இந்தியா வந்தேன் என தெரிவித்துள்ளார்.
இலங்கையையிலிருந்து இந்தியா செல்வதற்கு படகோட்டி ஒருவரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்ததாகவும், இதற்கிணங்க நேற்று காலை இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியா வந்ததாகவும், குறித்த நபர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் தனுஷ்கோடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
1 comments :
PLease don't send him to sri lanka
Post a Comment