எல்ரிரிஈ இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்திய சிங்கப்பூர் வர்த்தகரை நாடு கடத்தியது அமெரிக்கா!
சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி வர்த்தகரான பால்ராஜ் நாயுடு ராகவன், கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவில் எல்ரிரிஈ இயக்கத்திற்கு ஆயுத கொள்வனவு தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இதற்கமைய, ஐந்தரை கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், இவர் முயற்சித்துள்ளார். இந்த ஆயுதங்களை இலங்கைக்கு அருகே உள்ள சர்வதேச கடல் எல்லைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து எல்ரிரிஈ இயக்கத்திற்கு வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை 2010ம் ஆண்டு விதிக்கப்பட்டது. இத்தண்டனை நிறைவடைந்த நிலையில், பால்ராஜ் நாயுடுவை அமெரிக்க அரசு கடந்த 16ம் திகதி சிங்கப்பூருக்கு நாடு கடத்தியது.
0 comments :
Post a Comment