Sunday, December 29, 2013

அதிகாரமும் செல்வமும் தலைவிரித்தாடுவதே வரவு செலவு திட்ட வீழ்ச்சிக்குக் காரணம்! - மைத்திரிபால சிரிசேன

உள்ளுராட்சி சபைகளின் வரவு செலவு திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு அடிப்படை காரணம் கொள்கை அளவிலான அரசியலுக்கு பதிலாக அதிகாரத்தையும், செல்வத்தையும் அடிப்படையாக கொண்டதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார். அரசியலில் நீண்ட தூரம் பணயிக்க வேண்டியிருப்பதால் கட்சியின் கொள்கைகளுக்கும் ஒழுக்கத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவை நகர சபையின் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். இதற்கென 60 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வாவும் இதில் கலந்து கொண்டார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் உள்ளு}ராட்சி நிறுவனங்களின் ஊடாகவே தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரமும், செல்வமும், தலைவிரித்தாடுவதன் மூலமே இந்த வரவு செலவு திட்டங்கள் உள்ளு}ராட்சி சபைகளில் தோல்வியடைவதாக கட்சி செயலாளர் என்ற வகையில் என்னால் கூறமுடியும். அதிகாரத்துடன் பொருளாதார ரீதியாக தன்னை எவ்வாறு பலப்படுத்தி கொள்ள முடியும் என்ற சிந்தனையில் செயற்படுவதன் மூலம் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுகின்றன. அல்லது குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள். ஒரு கனவான் அரசியல்வாதி இவ்வாறு செயற்படமாட்டார். கொள்கையும் மனிதாபிமானமும் உள்ள ஒருவர் சிறந்த அரசியலில் ஈடுபடுவார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உருவான அனைத்து தலைவர்களும் உள்ளு}ராட்சி சபைகள் ஊடாகவே தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தள்ளார்கள். இன்றைய உள்ளு}ராட்சி நிறுவனங்களில் உள்ளவர்களை பார்க்கும் போது அவ்வாறான தலைமைத்துவம் ஒரு புறம் இருக்க அவர்கள் உள்ளு}ராட்சி நிறுவனங்களிலேயே அஸ்தமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com