Tuesday, December 10, 2013

இஞ்சிப் பாண் வீடு உருவாக்கி உலக சாதனை (படங்கள்) !!

22அடி நீளமான உலகிலேயே மிகப்பெரிய இஞ்சிப்பாண் வீட்டை உருவாக்கி அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தி லுள்ள பிரையன் நகரைச் சேர்ந்த மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.5 பேரைக் கொண்ட குடும்பம் வசிக்கக் கூடிய அளவு பெரிதான இந்த உண்ணக்கூடிய வீடு 35மில்லி யன் கலோரி சக்திப் பெறுமானம் உடையதாகும்.மேற்படி இஞ்சிப்பாண் வீட்டை அமைப்பதற்கு 4,200 இறாத்தல் மா, 3,000 இறாத்தல் சீனி,1,800 இறாத்தல் வெண்ணெய்,7,200 முட்டைகள், 22,304 இனிப்புகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனை உலகின் மிகவும் பெரிய இஞ்சிப்பாண் இல்லமாக அங்கீகரித்து கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் பதிந்து சான்றிதழை வழங்கியுள்ளனர்.இந்த வீட்டைப் பார்த்து இரசிப்பதற்கு ஒவ்வொரு இரவும் 600 ற்கும் மேற்பட்ட மேற்பார்வை யாளர்கள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வீடானது காட்சிக்கு வைக்கப் பட்டு ஒரு வாரத்துக்கும் குறைந்த காலப் பகுதியில் 150,000 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளது.இந்தப் பணம் அந்நகரிலுள்ள சென் ஜோசப் சுகாதார முறைமைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.மேற்படி வீடு 39,201.8 கன சதுர அடி அளவானதாகும்.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com