மகளை சித்திரவதை செய்த தாய்க்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறை !!
தனது 9 வயது மகளுக்கு சுடுதண்ணீர் ஊற்றி சித்திரவதை செய்த தாயை கல்முனை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிபதி சிவபாத சுந்தரம் ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருட கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கல்முனை மேல் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை எதிரியான தாயை ஆஜர்படுத்திய போதே மேற் படி தீர்ப்பு வழங்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தாய் ஒருவர் தனது 9 வயது மகளுக்கு சுடு தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment