Thursday, December 26, 2013

சிவாஜிலிங்கம் கப்பம் வாங்குவதாக வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர் பொலிஸில் முறைப்பாடு.

வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப் பினால் நிர்வகிக்கப்படுகின்றது. இச்சபையின் தலைவராக முன்னாள் பாடசாலை அதிபரான ஆனந்தராசா உள்ள துடன் சபையின் 2014ம் ஆண்டுக்கான முதலாவது வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இரண்டாவது வரவுசெலவுத்திட்டமும் தோற்கடிக் கப்படும் என திட்டவட்டமாக நம்பப்படுகின்றது. இச் சதியின் பின்னணியில் சபையின் உறுப்பினராக விருந்து தற்போது மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள சிவாஜிலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமான குலநாயகம் ஆகியோர் உள்ளதாக சபையின் தலைவர் ஆனந்தராசா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

வல்வெட்டித்துறை மாநகர சபையின் பிணக்கு மற்றும் சொந்த உறுப்பினர்களாலேயே வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் சேனாதிராஜா ஆகியோர் உறுப்பினர்களை அழைத்து வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள் பதவிகள் பறிக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் தோற்கடிப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருப்பதாக அறிய முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் உள்வீட்டு முரண்பாடுகளும் அதிகாரப்போட்டியுமே இதற்கான காரணம் என அறிய முடிகின்றது.

வல்வெட்டிதுறை நகரசபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க தலைமை தாங்குகின்ற சபை உறுப்பினர் குலநாயகம் தொடர்பாக பிரதேச மக்கள் மற்றும் தலைவர் ஆனந்தராசா ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் முறையிட்டபோதும், இந்தியாவில் தனது குடும்பத்தை வைத்துவிட்டு இலங்கையிலே விடுமுறைக்கு வருகின்ற மாவை சேனாதிராஜா குலநாயகத்தின் வீட்டிலேயே குடிகொள்வதால் குலநாயகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இதேநேரம் வல்வெட்டித்துறை பஸ் நிலையம் முன்பாகவுள்ள மாநகர சபைக்கு சொந்தமான கடை ஒன்றில் சிவாஜிலிங்கம் தனது பிரத்தியேக செயலாளர் கருணாகரன் ஊடாக முறைகேடான வசூலிப்பு ஒன்றை செய்து சபைக்கு வரவேண்டிய வருமானத்தை தனது பையில் போட்டுக்கொள்வதாகவும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் ஆனந்தராசா இன்றிரவு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாநகர சபைக்கு சொந்தமான கடை ஒன்று வருடாந்தம் 70000 ஆயிரம் ரூபாவிற்கு வல்வெட்டித்துறை வாசிகசாலை நிர்வாத்தினருக்கு வழங்கப்பட்டது. ஆனால் குறித்த கடை ஒப்பந்த விதிமுறைகளை மீறி பெண்ணொருவருக்கு நாளாந்தம் 700 ரூபா வீதம் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் வாடகையினை சிவாஜிலிங்கத்தின் செயலாளர் கருணாகரன் பெற்று வருவகின்றார். இது தொடர்பில் வாடகைக்கு கடையை பெற்றுள்ள பெண் நகர சபைத்தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எழுத்துமூலம் நீதிகோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை நகரசபைத் தலைவருக்கு ஆதரவாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

1 comments :

Anonymous ,  December 26, 2013 at 11:53 PM  

ஏற்கனவே தமிழ் மக்களுக்கு சிவாஜிலிங்கம் என்ற களிசறை சாக்கடை கிரிமினலை நன்கு தெரிந்து விட்டது.
இப்போ, அந்த சாக்கடை கிரிமினல் தன்னால் இயன்றளவு சுருட்டிக்கொண்டு தமிழ் நாட்டில் அல்லது வேறு ஒரு நாட்டில் தஞ்சயமடைய யோசித்துள்ளது. அதற்கிடையில் அவனை பிடித்து லைட்போஸ்டில் கட்டி செருப்பு, தும்புத்தடி, விளக்குமார் கொண்டு நல்ல தண்டனை கொடுத்து, இனிமேலும் தமிழ் மக்களை ஏமாற்றி வாழ இடமளிக்க ஒருபோதும் விடக்கூஒடாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com