இனியும் எங்கள் தலைவராக பிரபாகரனே இருப்பார்! இப்படிச் சொல்கிறார் கொண்டம் ஸ்ரீதரன்!
தொடர்ந்தும் தங்களது அரசியல் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரனே இருப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.
“புதிய தலைமுறை” எனும் ஐரோப்பிய தொலைக்காட்சியுட னான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்று ம்போதே ஸ்ரீதரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தொலைக் காட்சியின் “அக்னிப் பரீட்சை” எனும் நிகழ்ச்சியில் கருத்துரைக்கு ம்போது, “தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் மௌனிகளாக இருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த எம்பி வன்னியிலுள்ள மக்களுக்கென புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறித்து வருகின்றார். இவரது இந்த வசூல் தொடர்ந்தும் வெற்றிகரமாக இடம்பெறவேண்டுமென்பதற்காக ஆங்காங்கே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
இதில் மிகவும் முக்கியமான விடயம் யாதெனில் இவர் வெளியிடும் கருத்துக்கள் உடனடியாவே சிங்கள ஊடகங்களில் வந்துவிடுகின்றது. இதற்கு காணரம் இல்லாமல் இல்லை. இக்கருத்துக்களுக்காக இவருக்கு தொடர்ந்து கொடுப்பனவுகளும் இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவர் தொடர்பாக இலங்கைநெட்டுக்கு தெரிவிக்கையில்’ இவ்வாறான கருத்துக்களை நாம் தெரிவித்தால் நிலைமை அதோ கதிதான். ஆனால் சிறிதரனால் மாத்திரம் இவ்வாறு பேச முடிகின்றது- இவரை நாளை சீஐடி அழைத்தது என்று அவரது தம்பி செய்தி் போடுவார். அதைப்பார்த்து தமிழ் மக்கள் ஓகோ சிறிதரன் மீது அரசாங்கம் சீற்றமாக உள்ளது என்பார்கள். ஆனால் அங்கு சிறிதரன் அழைக்கப்படுவது கக்கிய இனவாத்திற்கு சன்மானம் வழங்குவதற்காக என்றார்.
அதாவது சிறிதரன் கக்கும் இனவாதம் மஹிந்தவின் பணத்திற்காக என்றும் இவர் இனவாதம் கக்கும் அளவிற்கு சிங்கள மக்கள் மஹிந்தவுடன் நெருங்கி இருப்பர் என்றும் கூறினார்.
(கேஎப்)
3 comments :
He is criminel,so he will say this always.
why the government did not take any action against them?
he must be arrested. if the government allowed them to issue such statements will will become a big issue in future.
so government have to take immediate action against this donkey.
One side he have secret link with goverment and army, that why the government did not take any action against him.
Post a Comment