கல்யாணதிஸ்ஸ தேரரின் பிணை மறுப்பு! வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தினை மூடிவிட உத்தரவு!
மறு அறிவித்தல் வரை வவுனியா அட்டம்பகஸ்கட செத் செவன சிறுவர் இல்லத்தினை மூடிவிடுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக் கடைப்பிடித்து நடத்தப்பட வில்லை என்று சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப் படுகின்ற சிறுவர் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவான கல்யாணதிஸ்ஸ தேரரின் பிணையை நிராகரித்ததுடன் மேலும் 14 நாட்களுக்கு கல்யாணதிஸ்ஸ தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் வி.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment