சூரியனுக்கு மிகத் தொலைவில் புதிய இராட்சத கிரகம் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச விண்வெளி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதில் சூரியனுக்கு அப்பால் மிக அதிக தொலைவில் புதிய இராட்சத கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளதுடன் அதற்கு எச்.டி. 106906 என பெயரிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது அதைச் சுற்றி சூரியன் போன்ற நட்சத்திரம் உள்ளதுடன் அது ஜுபிடர் கிரகத்தைவிட 11 மடங்கு பெரியதாக இருப்பதுடன் மற்ற கிரகங்களின் அதிவேக சுழற்றியால் சிதறுண்டு இக்கிரகம் உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுத்தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது இந்த கிரகத்தின் அருகே பூமியில் இருப்பதை போன்று நட்சத்திர கூட்டங்கள் பல உள்ளதாகவும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர்வதேச விண்வெளி நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment