இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோரின் செல்போன் பேச்சுக்களை பிரபல செய்தி நிறுவனம் இடைமறித்து ஒட்டு கேட்டதாக வெளியாகியுள்ள தகவல் லண்டனில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பத்திரிகை உலக ஜாம்பவானான ரூபர்ட் முட்ரோச்சுக்கு சொந்தமான ஏராள மான ஊடகங்களில் ஒன்று 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்'. இந்த பத்திரிகை பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் தகவல்களை ஊடுருவி ஒட்டுகேட்டு பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வந்தது.
இந்த விவகாரம் அம்பலமாகியதையடுத்து, 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்' இழுத்து மூடப்பட்டது. அந்த பத்திரிகையின் அதிபர் ரூபர்ட் முட்ரோச் மற்றும் ஆசிரியர் குழுவினர் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்டின் முன்னாள் செய்தி ஆசிரியரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த 2006-ம் ஆண்டில் கேத் மிடில்டனுடன் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் பேசிய உரையாடல்களின் ஒட்டுகேட்கப்பட்ட பதிவுகளை கோர்ட்டில் ஒலிபரப்பிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இது தொடர்பாக அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். இங்கிலாந்தின் சந்தர்ஸ்த் பகுதியில் அப்போது இராணுவ பணியில் இருந்த இளவரசர் வில்லியம், ஒரு தாக்குதல் சம்பவத்தில் மயிரிழையில் தான் உயிர் தப்பிய நிகழ்ச்சியை காதலி கேத் மிடில்டனுக்கு அந்த உரையாடலில், சுவைபட விளக்கி பேசியிருந்தார்.
இதேபோல், ஒரு விடுமுறை காலத்தில் வேட்டைக்கு செல்ல திட்டமிட்டிருந்த வில்லியம், 'நீயும் என்னுடன் வேட்டைக்கு வந்தால் நன்றாக இருக்கும்' என்று காதலி கேத் மிடில்டனுக்கு அனுப்பிய குறுந்தகவலும் இடைமறிக்கப்பட்ட ஆதா ரத்தை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஹரியின் செல்போனுக்கு அவரது முன்னாள் பெண் தோழி போல் அவரது சகோதரர் வில்லியம் குறும்புத்தனமாக அனுப்பிய மற்றொரு மெசேஜையும், ´நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்டின் முன்னாள் செய்தி ஆசிரியர் ப்ரூக்ஸ் இடைமறித்து ஒற்றறிந்ததற்கான ஆதாரமும் இதன்போது தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment