யுத்தம், வெற்றி தோல்வி பற்றிய கருத்தெல்லாம் முடிந்து விட்டது! ஐக்கியத்தை கட்டியெழுப்புவதையே சிந்திக்க வேண்டியுள்ளது!
தற்போதைய அரசாங்கத்திடம் இன,மத பேதமில்லை. அனை வரும் இலங்கையர்கள் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஒரே இலங்கையர்கள் என்ற கோட்பாட்டை உருவாக்குவதே அர சாங்கத்தின் நோக்கமாகும். தற்போதை யுத்தம் தொடர்பான சர்சை முடிந்து விட்டது. வெற்றி தோல்வி பற்றிய கருத்தும் முடிந்து விட்டது. தற்போது நாம் ஒரே இலங்கையர் என்ற வகையில் பரபஸ்பரம் ஐக்கியத்தை கட்டியெழுப்புவது எப்படி என்பது தொடர்பாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.
எமது தாய்மொழி சிங்களமாக இருக்கலாம், தமிழாக இருக்கலாம் அவை எமது 2 ஆம் மொழியல்ல எமது தாய்மொழியாகும். நாம் அனைவரும் ஒருவரையொருவர் மதிக்கும் அவரவரவர் கலாசாரங்களை மதிக்கும் மக்களாக மாற வேண்டும். அதன் மூலம் இலங்கை மக்கள் என்ற கோட்பாடு கட்டியெழுப்பப்படும்.
2 வது அரச கரும மொழி போட்டியில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மொழியின் மூலம் இனங்கள் மத்தியில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் போட்டிகள் இடம்பெற்றன. கல்வி அமைச்சில் நடைபெற்ற விருது விழாவில் அமைச்சர் பந்துல குணவர்தனவும் உரையாற்றினார்.
மஹிந்த சிந்தனையின் மூலம் அறிவு ரீதியிலான அபிவிருத்திகளை எட்டுவதற் காக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் உயிர் மிகவும் பெறுமதியான தென அரசாங்கம் இனங்கண்டுள்ளது. தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியை யும் சிஙகள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழியை இணைப்பு மொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் மும்மொழி கொள்கையை நடை முறைப்படுத்து வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment