வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இரகசிய மான முறையில் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குறிறச்சாட்டில் இரவு நேர பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தொடரிந்து இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது பணத்திற்கு ஆசைப்பட்டு கைதிகளுக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்ததுடன் இவரது காலணிக்குள் மறைத்து வைத்திருந்த ஆறு சிம் அட்டைகளையும் புலனாய்வுப்பிரிவினர் மீட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இவ்வாறு நீண்ட காலமாக இவருக்கு பணத்தைச் செலுத்தி சிம் அட்டைகளைப் பயன்படுத்தி வெளித் தொடர்புகளை பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment