ஜான் எலியாசனைக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் -இன்னர்சிற்றி பிரஸ்
ஐக்கிய நாடுகள் பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலியாசனை, பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ நியூயோர்க்கில் நேற்று சந்திப்பென்று இடம்பெற்றுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலரின் பேச்சாளரிடம், இன்னர்சிற்றி பிரஸ் மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு, ஐக்கிய நாடுகள் பிரதி பொதுச்செயலருக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பான விபரங்கள் இல்லை என்றும், இது உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வழக்கமான கலந்துரையாடலின் ஒரு பகுதியே என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரினால் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது
0 comments :
Post a Comment