ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அம ர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்படலாமென இலங்கையின் நட்புறவு நாடுகள் அரசாங் கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளி யாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை எனவும் எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத் துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரி வித்தார்.
மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க நாம் தயாராகவேயுள்ளோம். அமர்வுகளின்போது அரசாங்கம் என்ற வகையில் எம்மிடையே எழுப்பக்கூடிய வினாக்களை அவற்றுக்கான விடைகளை தயார்படுத்தி வருகின்றோம்.
மோதல்களுக்குப் பின்னர் மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றச் செயற்பாடுகளை விளக்கமளிப்பது குறித்து நாம் தீர்க்கமாக ஆராய்ந் துள்ளோமெனவும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றச் செயற்பாடுகள் குறித்து உலக நாடுகள் தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்குமெனவும அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment