கொட்டாஞ்சேனை ஆடைத் தொழிற்சாலையில் தீ பத்து!
கொழும்பு, கொட்டாஞ்சேனை - பரமானந்த விகாரை மாவத்தையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடைத் தொழிற்சாலைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்புப் படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன் தீயினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பான கணிப்பீடுகள் இன்னும் கணிப்பிடப்படவில்லை என்பதுடன் தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment