Thursday, December 26, 2013

இராணுவ முகாம்கள் தொடர்பான தகவல்களை வெளிநாட்டினருக்கு கொடுக்கும் சிறிதரனின் முயற்சி முறியடிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது பரிவாரங்களுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில், கிராஞ்சி ஆகிய பகுதிகளுக்கு சென்ற வேளை, அவர்களுடன் கூடச் சென்ற இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் வாரஇதழ் ஒன்றினுடைய மகா தமிழ் பிரபாகரன் (வயது24) என்ற ஊடகவியலாளர் சிறிதரனின் மிக நெருக்கமானவர். சிறிதரன் தொடர்பான செய்திகள் இந்திய ஊடகங்களில் வருவதற்கு உதவி செய்பவரும் இவரே. அத்துடன் சிறிதரனின் உறவினர்களால் நடத்தப்படும் இணையங்களுக்கு அவர் இந்தியச் செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இந் நிலையில் இலங்கை தொடர்பான பல புகைப்படங்களைப் பெற்று அதனை இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவரச் செய்யும் நோக்கிலேயே குறித்த ஊடகவியலாளர் இலங்கை வந்துள்ளார்.

சுற்றுலா விசாவில் வந்து அரசுக்கு தெரியாமல் இலங்கை தொடர்பான தகவல்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட குறித்த ஊடகவியலாளர், சிறிதரனின் அழைப்பின் பெயரிலேயே இலங்கை வந்துள்ளார்.

இவ்வாறு தகவலைப் பெறும் நோக்குடன் வேரவில், கிராஞ்சி ஆகிய பகுதிகளுக்கு சிறிதரன் உள்ளிட்ட குழுவினர் சென்ற போது அவர்களுடன் சென்ற குறித்த ஊடகவியலாளர் அங்கிருந்த இராணுவ முகாம்களைப் படமெடுத்திருந்த நிலையில், அதனை அவதானித்த இராணுவத்தினர் அவரை கைது செய்து பொலிசிடம் ஒப்படைத்துள்ளனர். அங்கு விசாரணைகள் முடிவடைந்ததும் இன்று (26) குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் வந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே குறித்த இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனையோ அல்லது அவருடன் சென்ற இந்திய பிரஜை தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களையோ பொலிசார் கைது செய்யவில்லை. ஆனால் அவர்கள் இந்தியப் பிரஜையை விடுவிப்பதற்காகவே பொலிசாருடன் கதைத்துக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் சிறிதரன் தன்னையும் கைது செய்ததாகவும் நீண்ட நேரத்தின் பின் விடுவித்ததாகவும் கூறுவது வேடிக்கையானது.

2 comments:

  1. தேச துரோக குற்றத்தின் கீழ் ,அறன தண்டனை விதிக்கலாம்.

    ReplyDelete
  2. தேச துரோக குற்றத்தின் கீழ் ,மரண தண்டனை விதிக்கலாம்.

    ReplyDelete