யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் இலங்கையில் என்ன நடந்தது! எட்டு வீடியோ காணொளிகள் ஐ.நா.விற்கு...... -ருவான்!
அடுத்த வருடம் மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்விற்கு முன் இலங்கையின் உண்மைநிலை பற்றிய எட்டு வீடியோ காணொளிகளை ஐக் கிய நாடுகள் மனித உரிமைகள ஆணைக்குழுவிற்கு அனுப் பவுள்ளோம் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
உலகின் நடுநிலையான ஒன்றியம் பக்கச்சார்பாக நடந்து கொள்ளக்கூடாதெனவும் யுத்த கால கட்டத்தில் இலங்கையில் நடந்தவை என்னவெ ன்பதை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளோம் என இராணுவப் பேச்சாளர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தததிற்கு முன்னரும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் இலங்கையில் என்ன நடைபெற்றது? குறிப்பாக வடக்கில் இராணுவத்தினர் எவ்வாறு செயற்பட்டனர் என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எட்டு வீடியோ காணொளிகளை தயாரித்து வருகின்றது.
அடுத்த வருடம் மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்விற்கு முன்னர் இக் காணொளிகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், அதன் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இவ் வீடியோ காணொளிகள் யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் புரிந்துணர்வொன்றினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
மேலும் இன்று ஒரு சில தீய சக்திகளின் செயற்பாடுகளினால் இலங்கை மீதும் இராணுவத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்படாவிடின் இன்று இலங்கையும் மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளைப்போல் தீவிரவாதம் போராட்டம் குண்டு வெடிப்புகளில் தினம் தினம் அழிந்து கொண்டிருக்கும். ஏன அவர் தெரிவித்தார்.
யுத்த குற்றங்கள் இலங்கை இராணுவத்தினரால் இடம்பெறவில்லை என்பதற்கு எம்மிடம் பல ஆதாரங்கள்உள்ளன. அவற்றினை அடிப்படையாக வைத்தே அவ் எட்டு வீடியோ காணொளிகளையும் தயாரிக்கின்றோம். இதில் உண்மையே அடங்கியுள்ளது.
சர்வதேசத்தில் நடுநிiயாக செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாகவோ அல்லது கருத்துக்ககு அமையவோ முடிவெடுக்க கூடாது. இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
1 comments :
well done vanika sooriya. UN Must be realized what was the LTTE did for Tamils
Post a Comment