ரஷ்யாவை ஆயுத பலத்தினால் அழிக்கவியலாது! - புட்டீன்
ரஷ்யாவை விடவும் உயர் இராணுவ பலத்தை யாரேனும் ஒருவர் கைப்பற்ற முடியும் எனும் போலிக்கருத்தை யாரும் நம்பக் கூடாது எனவும், அதற்கு ஏமாறக் கூடாது எனவும் ஜனாதிபதி விலேதிமீர் புட்டீன் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யப் பாராளுமன்றத்தின் இரண்டு மந்திரி சபைகளை ஒன்றிணைத்து அரசவையில் உரையாற்றும்போது அவர், அவ்வாறான நிலைப்பாட்டுக்கு ஒருபோதும் ரஷ்யா ஒருபோதும் இடமளிக்க மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்பாதுகாப்புக்காக எனக்குறிப்பிட்டாலும் அமெரிக்காவின் தாக்குதல் செயற்பாட்டின் ஒரு பிரிவாகிய ஐரோப்பாவெங்கும் பரவுவதற்கு ஆயத்தமாயுள்ள பெலஸ்றிக் ஏவுகணை ஒழிப்புத் தாக்குதல் தொடர்பில் ரஷ்யா பெரும் அவதானத்துடன் நிற்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஈரான் போன்ற நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து ஐரோப்பாவை பாதுகாத்துக் கொள்ளவே இவை நிர்மாணிக்கப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டாலும் இது ஈரானின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றங்களும் நிகழ்ந்தாகத் தெரியவில்லை. அந்நாடு தொடர்ந்து தனது அணுவாயுத செயற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றது.
ஐரோப்பாவை தன்வயப்படுத்துவதற்கான அமெரிக்காவின் ஒரு சூழ்ச்சியே இதுவாகும் என ரஷ்யப் பாராளுமன்றின் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான குழுவின் முதல்வர் எலக்ஸெய் பூஷ்கோவ் குறிப்பிடுகிறார்
நேட்டோ ஒப்பந்தம் மெல்ல மெல்ல பலமிழந்து வருவதாகவும், அதனுடன் தொடர்புற்ற முதலீடுப் பொறுப்புக்களை ஒரு சில நாடுகள் மட்டுமே ஏற்றிருப்தாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஐரோப்பிய இராணுவமயமாக்கலானது ஈரான் அல்லது கொரியப் பீதியிலிருந்து இல்லாமல் செய்வதையே செய்கிறது என்றும் குறிப்பிடுள்ளார்.
இதேவேளை, இன்னும் சில நாடுகளால் வளர்ச்சி கண்டுவருகின்ற சிற்றளவிலான அணுவாயுதங்கள், சம்பிரதாய சூழ்ச்சிமயமான ஏவுகணைகள் விடயத்திலும் ரிஷ்ய அவதானமாக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியல் அல்லது தொழில்நுட்ப சவால்களை முறியடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா தனது இராணுவத் தொழில்நுட்பத்தை நவீனமயப்படுத்தும் செயற்றிடத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், அதற்காக 2020 ஆம் ஆண்டளவில் 700 மில்லியன் டொலர்களை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment