மும்மூர்த்திகளின் முற்றுகைக்குள் கொண்டம் சிறிதரன்: மானத்துடன் வெளியேறுவரா? சித்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குள் வடமாகா ணசபை தேர்தலின் பின் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு ள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகள் என சிறப்பிக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்புக்காத்து சுமந்திரன், வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரினது கருத்துக்களும் முடிவுகளுமே இன்று கூட்டமைப்பின் முடிவுகள் என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதில் தமிழீழ விடுதலைப் போராட்டம் வீரியத்துடன் இடம்பெற்ற காலத்தில் அரசின் கைக்கூலியாக இருந்த இரா.சம்மந்தன் மற்றும் அரசின் கைக்கூலிகளாக அன்று முதல் இன்று வரை தொழிற்படும் சுமந்திரன், விக்கி ஆகிய மூவரும் ஒரு இணக்க அரசியலை நோக்கி நகர்ந்து செல்கின்றனர். இவ் இணக்க அரசியலுக்கு சிறிதரன் தடையாக இருப்பதனால் சிறிதரனை ஓரம் கட்ட இம் மும்மூர்த்திகள் தீர்மானித்துள்ளன. அதைவிட அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் யாழில் போட்டியிட உள்ளார். சி.வி.விக்கி கொழும்பில் இருந்து யாழில் வந்து வென்றதைப் போல் தானும் வெல்லலாம் எனக் கருதியுள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம், தீவகம், சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கொண்டம் சிறிதரனுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று கடந்த மாகாணசபைத் தேர்தல் மூலம் தெரிந்து கொண்ட மும்மூர்த்திகள் தமது விளையாட்டை தற்போது ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் கடந்த நவம்பர் மாவீரர் வாரத்தின் போது பிரபாகரனின் பிறந்ததினத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கொண்டம் சிறிதரன் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தேசியவீரராக சித்தரித்துப் பேசியிருந்தார். மறு நாள் சிறிதரனின் பேச்சுத் தொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பிரபாகரனை தேசிய வீரர் என சிறிதரன் குறிப்பிட்டது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அது இல்லை. எமது நிலைப்பாடு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் புலிகளும் போர்குற்றம் செய்தார்கள் அவர்களையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சம்மந்தன் தெரிவித்திருந்தார்.
தேசியம் பேசி வீரவசனத்தை அள்ளிக் கொட்டிய சிறிதரன் தனது கதிரையை தக்க வைப்பதற்காக சம்மந்தனை எதிர்த்து எதுவும் பேசவில்லை.
மறுநாள் அப்புக்காத்து சுமந்திரன் பாராளுமன்றில் உரையாற்றும் போது எமது தலைவர் சம்மந்தன் ஐயா பேசும் போது கூச்சல் குழப்பம் போடுகிறீர்கள். தீவிரவாதத்தை ஊக்கிவித்து சிறிதரன் பேசும் போது அமைதியாக இருக்கிறீர்கள் என கூறியிருந்தார். இதற்கு பிறகும் மானங்கெட்ட நிலையில் அடுத்த தேர்தலிலும் சீற் வேண்டும் என்பதற்காக சிறிதரன் பொத்திக் கொண்டே இருந்தார்.
இவ்வாறு இழுபறி நிலை தொடர்ந்த போது கடந்த திங்கள் கிழமை தென்மராட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சிறிதரன் கிளிநொச்சியில் இருந்து இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் அனுப்ப முடியாது. அவ்வாறு அனுப்பினால் பல விவசாயிகள் தற்கொலை செய்யவேண்டி வரும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அதே நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சி.வி.விக்கினேஸ்வரன், சிறிதரன் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். அவருக்கு அறிவு இல்லை. இதெல்லாம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றார். அப்போதும் சிறிதரன் சீற்றுக்காக மௌனியாகவே இருந்தார்.
இதன் பின் கிளிநொச்சியில் உள்ள விவசாய அமைப்புக்களை ஒன்று திரட்டி இரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாது என கடந்த புதன்கிழமை அறிவிக்கச் செய்தார். தான் தெரிவித்த கருத்துக்கு பக்கபலமாக விவசாயிகளை திரட்டி கருத்து வெளிப்படுத்த செய்துள்ளதுடன் அவர்களை கொண்டு வடமாகாணசபையையும் எதிக்கும் கருத்துகளை வெளிப்படுத்தச் செய்துள்ளார். ஆனந்தசங்கரிக்கு செய்த பாவம் இப்போது சிறிதரனை ஆட்கொல்லத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு கொண்டம் சிறிதரனுக்கும் மும்மூர்த்திகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிரலையில் கொணடம் சிறிதரன் தன்மானத்தை காக்க வெளியில் வருவாரா? அல்லது சீற்றுக்காக தனது கௌரவத்தை அடகுவைப்பாரா என்பதை காலமே தீர்மானிக்கும்.
0 comments :
Post a Comment