Sunday, December 8, 2013

நான் ஒரு வார்த்தை கூறியிருந்தால் இன்று நானும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பேன்! சங்கரியின் ஆதங்கம்

பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது. அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா. ஆனால் எல்.ரி.ரி.யினர் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் வார்த்தை கூறியிருந்தால் இன்று நானும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், கூட்டமைப்பின் தலைவ ராகவும், இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித் துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கே. கே. எஸ். வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது. அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா.

ஆனால் நான் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும் என்று. நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும். விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்பிடும் வாக்குறுதிகளையும் நிறை வேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments :

Anonymous ,  December 8, 2013 at 10:46 AM  

as an experienced politican ,He has to leave all his political acrobatic
circus exercises and come out with the genuine politics.Time to time he changes his tactics accordingly to the circumstanses.

Anonymous ,  December 8, 2013 at 3:46 PM  

During your long political career along with late Mr. sjv,just tell us what you all have achieved on behalf of the tamil nation.....?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com