ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடமேறி மீண்டும் புலமைப் பரிசில் பரீட்சை நடாத்தும்...!
அடுத்து ஆட்சிபீடமேறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மீண்டும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை செயற்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாகவும், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள பிரேரணை க்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுடன் சேர்ந்து களமிறங்கும் எனவும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. ஹெரிசன் குறிப்பிட்டார்.
தம்புள்ளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
மேலும் அங்கு கருத்துரைக்கும்போது,
“அமைச்சர் பந்துல குணவர்த்தன செய்யப்போகின்ற வேலையினால் எங்களது ஏழைப் பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலைகள் இல்லாமல் போகப் போகின்றது. பணக்கார்ர்களின் பிள்ளைகள் கற்பதில்லை. கிராமப்புற பிள்ளைகளே நன்றாகக் கற்று, மேலிடங்களில் எல்லாம் பணிபுரிகிறார்கள். அதனாற்றான் அவர்கள் இவ்வாறான செயலைச் செய்வதற்கு எழுந்துள்ளார்கள். அவர்களுடைய இந்த செயற்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக எதிர்க்கின்றது. இது மாபெரும் குற்றம் என நான் நினைக்கிறேன். நாங்கள் பொதுமக்களுடன் இணைந்து வீதிக்குச் சென்று நாளைய பிள்ளைகளுக்காக அந்த அமைச்சர்களுக்கு எதிராக எங்களது எதிர்ப்பைத் தெரிவிப்போம். அதனால் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்து, இந்நாட்டில் மீண்டும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துவோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment