Tuesday, December 3, 2013

விக்கினேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன் இலங்கை வந்தால் எதிர்ப்பு

பொது­ந­ல­வாய மாநாட்டை பகிஷ்­க­ரித்த இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ரனின் அழைப்­பை­யேற்று இலங்கை வரு­வா­ரா னால் அதனை கடு­மை­யாக எதிர்ப்­ப­தாக சபையில் நேற்று தெரி­வித்த எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும்இ எம்.பி.யுமான ஜோன் அம­ர­துங்க, நாட்டை நேசிக்கும் எதிர்க்­கட்­சி­யான நாம் இதனை எதிர்ப்­ப­தோடு ஒரு நாட்டுத் தலை­வ­னுக்கு இங்கு வரு­மாறு அழைப்பு விடுக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு உள்­ள­தென்றும் அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற வரவு- செல­வுத்­திட்ட குழு நிலை விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே ஜோன் அம­ர­துங்க எம்.பி. இதனைத் தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

வட மாகாண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­கினேஸ்­வ­ரனின் அழைப்பின் பேரில் இந்­திய பிர­தமர் மன்­மோ­கன்சிங் மற்றும் பிர­தி­நி­திகள் யாழ்ப்­பாணம் விஜயம் மேற்­கொள்­வதை பிர­தான எதிர்க்­கட்­சி­யென்ற ரீதியில் கடு­மை­யாக எதிர்க்­கின்றோம். பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு கலந்­து­கொள்­ளாத மன்­மோ­கன்சிங் ஒரு முத­ல­மைச்சர் ஒரு­வரின் அழைப்பின் பேரில் இங்கு வர முடி­யாது. ஒரு நாட்டின் தலைவர் இலங்கை வர­வேண்­டு­மென்றால் எமது நாட்டு ஜனா­தி­ப­தியே அழைப்பு விடுக்க வேண்டும்.

அதை­வி­டுத்து முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு இந்­திய பிர­த­ம­ருக்கு அழைப்பு விடுக்க முடி­யாது. இதனை பிர­தான எதிர்க்­கட்­சி­யென்ற ரீதி­யிலும் நாட்டை நேசிக்கும் கட்­சி­யென்ற ரீதி­யிலும் கடு­மை­யாக எதிர்க்­கின்றோம்.

பொது­ந­ல­வாய மாநாட்டை இலங்­கையில் நடத்­தி­யதால் எமக்கு கிடைத்த பலன் என்ன ?
பிரிட்டிஷ் பிர­தமர் கமரூன் இங்கு வந்தார். இறு­தியில் என்ன நடந்­தது? அவர் இலங்­கைக்கு எதி­ரான கருத்­து­களை வெளி­யிட்டு வெளி­யே­றினார்.

அதா­வது இங்கு இடம்­பெற்ற மனித உரி­மைகள் மீறல் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்று கமரூன் வலி­யு­றுத்திச் சென்­றுள்ளார். பிரிட்டிஷ் பாரா­ளு­மன்­றத்­திலும் இதனை வலி­யு­றுத்­தி­யுள்ளார். அத்­தோடு பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் சட்­டங்­க­ளையும் அர­சாங்கம் மீறி­யுள்­ளது. இவ்­வ­மைப்பைச் சார்ந்த நீதி­ப­திகள் சங்கம் இங்கு வரு­வ­தற்கு விசா மறுக்­கப்­பட்­டது.

சனல் 4 ஊட­க­வி­ய­லாளர் மக்ரே தலை­மையில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விசா வழங்­கி­விட்டு எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது.

யாழ்ப்­பாணம் அக்­குழு சென்­ற­போது மத­வாச்­சியில் புகை­யி­ரதம் முன் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்டு திருப்பி அனுப்பி வைக்­கப்­பட்­டனர். இவை­யெல்லாம் எமது நாட்­டுக்கு அப­கீர்த்­தி­யையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சனல் 4 ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு தன்­னோடு கோப்பி குடிப்­ப­தற்கு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்தார்.

ஆனால், மறு­புறம் மக்­ரே­வுக்கு எதி­ராக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. இவ்­வா­றான செயற்­பா­டு­களால் பொது­ந­ல­வாய மாநாடு இங்கு நடத்­தப்­பட்­டதன் பய­னாக எது­வித நன்­மையும் கிடைக்­க­வில்லை.

அத்­தோடு ஜனா­தி­பதி இவ்­வ­மைப்பின் தலை­வ­ராக பதவி கிடைத்­தாலும் அதன் பயன் அற்றுப் போய்­விட்­டது.

எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்கு தகுந்த மதிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை. அவ­ரது அறையில் பாம்பு போடப்­பட்­டுள்­ளது. இந்தப் பாம்பு எப்­படி படி­யேறி அல்­லது மின் தூக்­கியில் ஏறி எதிர்க்­கட்சித் தலை­வரின் அலு­வ­ல­கத்­திற்கு வந்­தது. சிறி­கொத்த முன் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்டு அவ­ரது வாகனம் தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டது.

ஆனால், இது­வ­ரையில் எது­வி­த­மான விசா­ர­ணை­களும் நடத்­தப்­ப­டவும் இல்லை, எவரும் கைது செய்­யப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டவும் இல்லை. உலகின் விசா­ல­மான நாடு­க­ளான இந்­தி­யாவில் 32 அமைச்­சர்­களே உள்­ளனர்.

சீனாவில் அமைச்­சர்­களின் தொகை 27 ஆகும். ஆனால், இங்கு சிறிய நாட்டில் அமைச்­சர்கள் தொகை 65 க்கும் மேலாக உள்­ளது. அரச தரப்பு ஆத­ர­வுடன் ஊழல் மோச­டிகள் தலை தூக்­கி­யுள்­ளன. பெரும்­பா­லான அமைச்­சர்கள் தொடர்பில் ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டுகள் இலஞ்ச ஊழல் திணைக்­க­ளத்தில் உள்­ளன.

ஆனால், எதுவும் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை. மூலையில் போடப்­பட்­டுள்­ளன.
சாதா­ரண பொலிஸ்­காரர் சிறிய இலஞ்சம் ஒன்றை பெற்­று­விட்டால் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால், பாரிய ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டுவோர் சுதந்­தி­ர­மாக சுற்றித் திரி­கின்­றனர். தேர்­தல்கள் திணைக்­களம் இன்று பல் பிடுங்­கப்­பட்ட சிங்­க­மா­கவே செயற்­ப­டு­கி­றது. அதன் செயற்­பா­டுகள் அனைத்தும் செய­லி­ழந்­துள்­ளன. தேர்­தல்­க­ளின்­போது சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தில்லை.

எனவேm மீண்டும் 17ஆம் திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க வேண்டும். பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பின் சட்டங்களை தலைவரென்ற ரீதியில் ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தலைமைப் பதவியும் பறிபோகும். இவ்வமைப்பும் இல்லாமல் போய்விடும்.

நாட்டில் இன்று நீதித்துறையின் சுயாதீன த்தன்மையும் இல்லாமல் போயுள்ளது. எதிர்க்கட்சியினருக்கு வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு சுகாதார வசதிகள் தொடர்பான திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை வரவேற்கின்றோம். அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை.

1 comments :

Anonymous ,  December 3, 2013 at 11:44 AM  

Party whip Mr.John Amaratunge's comments are greatly appreciated.This is the marvellous example of the country's unity.
Mr.CV after all a president of the PC, doesn't have the overseas rights or internal rights:he has the rights within a certain bounds of decency.The Hon president or may be the minister of foreign affairs have the rights to invite a foreign VIP.We know very mr.CV can do an invitation with the will of the president and not accordingly to his own will.Sometimes this can be a joke of some media in order to upset us.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com