காணாமல் போன மாணவன்;சடலமாக மீட்பு!!
காணாமல் போனதாகக் கூறப்பட்ட லிந்துலை - மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் இராஜகுலசேகரம் ராஜ்சன்ஜி மெராயா தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள் ளார்.லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா தோட்டத்தில் வசிக்கும் இராஜகுலசேகரம் ராஜ்சன்ஜி வயது 18 என்ற பாடசாலை மாணவன் செவ்வாய்கிழமை (03) படித்துக் கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி யளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரும் பிரதேச வாசிகளும் மாணவரை தேடி வருகின்றனர்.இந்நிலையில் இன்று (06) காலை மாணவன் மெராயா தெப்பக்குளத்தில் சடலமாகக் கிடப்பதை கண்ட பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள் ளனர்.சடலம் தற்போது தெப்பக்குளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.லிந்துலை பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
0 comments :
Post a Comment