Saturday, December 14, 2013

ஹாமில்டனில் பெண்ணொருவரை கைதுசெய்ய பொலிஸ் கையாண்ட சாகசங்கள்! பொலிஸாருக்கு குவியும் பாராட்டுக்கள் (காணொளி)

கனடா ஹாமில்டனில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யபடுவதை தடுப்பதற்காக, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பொலீஸ் அவரைத் தாக்குவதாக கத்தினார். எனினும் பொ லீஸ் அதிகாரிகள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணை சில பொலீஸ் சாகசங்களை கையாண்டு அந்தப் பெண்ணை கைவிலங்கிட்டனர். ஆனால் குறித்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் குறித்த பெண்ணை பொலி ஸார் பலமாக தாக்கியதாக குறை கூறினார்கள்.

ஆனால் உண்மையில் பொலீஸ் அவரைத் தாக்கவில்லை எனவும் அவர்கள் மென்மையான கை நுட்பங்கள் மட்டுமே பயன்படுத்தி அந்தப் பெண்ணை வழிக்குக் கொண்டு வந்ததாக பொலிஸ் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

பொலிஸார் கையாண்ட நுட்பத்தைப் பார்க்கும் போது, குறித்த பெண்ணிற்கு குத்துக்கள் விடுவது, உதைப்பது அல்லது சக்தியோடு தரையில் அடக்குவது போல் தோன்றும். ஆனால் அதனால் எந்த பாதிப்போ அல்லது வலியோ உருவாக்காது என்று பொலீசார் விளக்கினர்.

இந்த சம்பவத்தை குறித்த பெண்ணை பொலீஸார் கைது செய்யும் போது திரண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். குறித்த வீடியோ வைரல் போல இணையதளங்களில் பரவிவருகிறது. இந்த வீடியோவை இணையதளங்களில கண்ட பலர், பொலீஸ் அதிகாரிகள் சம்பவத்தைக் கையாண்ட விதத்தைப் பெரிதும் பாராட்டினர். இதை அறிந்த பொலீஸ் தலைமை அதிகாரி, சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை மிகவும் பாராட்டினார்.

அதே நேரத்தில் பொலீசாருக்கு வேண்டிய உதவிகள் செய்யாமல், நின்று கொண்டு இருந்த பொது மக்கள் தங்களிடம் இருந்த காமிரா தொலைபேசிகளில் இந்நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்ததை குறை கூறினார். இதுவரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஆதரவு மின்னஞ்சல்கள் இந்த நிகழ்வு குறித்து பொலீஸ் துறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com