Wednesday, December 4, 2013

நிர்வாணமாக வீட்டிற்குள் நுழைந்து உறங்கியவருக்கு தர்ம அடி - யாழ்.ஓட்டுமடம்.....

மதுபோதையில் நிர்வாணமாக இருந்த ஒருவர் மற்றொரு வரின் வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அந்த வீட்டுக்காரர்களுடனேயே உறங்கிய சம்பவமொன்று யாழ் ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்.ஓட்டுமடம் பகுதியி லேயே இந்த சம்பவம்,செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.

அதே பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவரே மற்றொரு வரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உறங்கியுள்ளார். வீட்டின் முன்பக்க கதவினை உடைத்துகொண்டு வீட்டிற்குள் சென்று குறித்த நபர் வீட்டில் ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்களுடன் இணைந்து தானும் உறங்கியுள்ளார். கண்விழித்த வீட்டு காரர்களில் ஒருவர் புதிய ஒருவர் அதுவும் அலங்கோலமாக உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு வீட்டிலிருந்த ஏனையவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிலிருந்த அனைவரும் சேர்ந்து அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடிகொடுத்துள்ளனர். 'நான் எவ்வாறு இங்கு வந்தேன், என்ன நடந்தது என்று தனக்கு எதுவும் தெரியாது என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை பெரித்துபடுத்தாமல் வீட்டுக்காரர்கள் அந்த நபரை விட்டு விட்டனர். தப்பினோம் பிழைத்தோம் என்றும் அவரும் அங்கிருந்து ஓடிவிட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com