அறநெறிப் பாடசாலை மாணவியுடன் தேரர் தேனிலவு! மாணவி வைத்தியசாலையில்… தேரர் சிறையில்
பலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் தேரர் ஒருவர் அவ்விகாரையில் நடைபெறும் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கவரும் மாணவி (15) யொருத்தியுடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தி, பின்னர் அம்மாணவியை உடுபுஸல்லாவ பிரதேசத்திலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றவேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் இவ்விருவரும் விடுதியில் தங்கியிருந்ததாகவும், இதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்குத் தெரிவித்த்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கேற்ப நேற்று (09) கைதுசெய்யப்பட்ட தேர்ர் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவி நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment