Friday, December 27, 2013

இலங்கை மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொள்ள வேண்டுமாம்: ஜீ.எல்.பீரிஸ்!

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களு டனும் நாட்டு மக்களின் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரு வதாகவும் எனவே சர்வதேச சமூகம் இலங்கை மீது நம் பிக்கை கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மேலும் தற்போது இலங்கை அரசாங்பம் உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் எனவே நாட்டை நல்ல வழியாக கட்டியெழுப்பக் கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதனைவிட தற்போது நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்திநிலையை எட்டியுள்ளதுடன் 11,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளதுடன் தற்போது யுத்த வலயத்தில் பாரியளவில் உட்கட்டுமான மேம்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் நன்மைக்கு வழிகோலாது எனவும், பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com