இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் !!
1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப் படுத்தப்பட்ட மனித உரிமைகள் தினத்திற்கு இன்றுடன் 20 வயதாகிறது.சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன் னிட்டு கொழும்பு மற்றும் பிரதேச மட்டத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் நிமல் புஞ்ஜிஹேவா தெரிவிக்கின்றார்.'உரிமைகளுக்காக செயற்படுவோம்' என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அனைத்து மனிதர்களுக்குக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திர ங்களுமே மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.இனம், சாதி, நிற வேறுபாடுகள் என்ற பாகுபாடுகளை காரணம்காட்டி,எந்தவொரு மனிதனும், எவராலும் புறக் கணிக்கப்பட கூடாது என்பதே மனித உரிமைகள் தினம் நினைவுபடுத்தப் படுவதற்கான முக்கிய காரணமாகும்.
மனித உரிமைகள் சர்வதேச ரீதியில் பேசும்பொருளாக மாத்திரம் அல்லாது, அனைத்து நாடுகளாலும் மதிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட வேண்டுமென்ற உன்ன தமான நோக்கில்,ஐக்கிய நாடுகள் சபையினால்,சர்வதேச மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. உள்நாட்டிலும்,உலக நாடுகளிலும் மனிதாபிமானத்திற் காக போராடும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் ஒரு தினமாக இது அமையப்பெற்றுள்ளது.
எத்தனையோ காரணங்களுக்காக தமது மனித உரிமைகளை இழந்து உலகளாவிய ரீதியில் நிர்க்கதியாக வாழும் ஆயிரக்க ணக்கான மக்களுக்கு,அத்தனை உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பது இன்றைய நாளில் நம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விடயமாகும்.
மனித உரிமைகள் முழுமையாக மதிக்கப்படுகின்றபோது மாத்திரமே, ஜனநாயகம், சுதந்திரம், நல்லாட்சி என்பன நிலைநாட்டப்பட்டு உண்மையான சமாதானமும் அபிவிருத்தியும் ஏற்படும் என்பது யதார்த்தம்.வாழ்வதற்கான உரிமை, கருத்து சுதந்திரம், கல்வி உரிமை, உணவுக்கான உரிமை என்பவற்றினை பாதுகாப்பதற்கு நாம் அனைவரும், இன, மத, பால்,வயது வேறுபாடின்றி ஒன்றிணைவோம்.
0 comments :
Post a Comment