ஹோட்டலாக மாறிய சிறைச்சாலை!!
ஜேர்மனியில் ஒரே ஒரு கைதிக்காக மட்டும் இயங்கி வந்த சிறைச்சாலை ஹோட்டலாக உருவெடுக்க உள்ளது.ஜேர்மனின் வடக்கு வெஸ்ட்பாலியாவில் கடந்த 2011ம் ஆண்டு மனநிலை பாதித்த கைதிகளுக்காக சிறைச்சாலையொன்று அமைக்கப்பட் டது.இதன் பராமரிப்பிற்காக 1.3 மில்லியன் யூரோ செலவாகி யுள்ளதுடன், பாதுகாவலர்கள் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருடமென்றுக்கு 2 மில்லியன் யூரோக்கள் செலவாகிறது.
மேலும் சிகிச்சை, உணவு, மருத்துவ செலவு மற்றும் போக்குவரத்து செலவென 1.75 மில்லியன் யூரோக்கள் செலவாகிறது.
இங்கு ஒரே ஒரு கைதி மட்டுமே இருந்ததால், ஒருவருக்காக மட்டும் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விவாதம் நாடாளுமன்றத்தில் எழுந்தவுடன் டிசம்பர் 31 2012ம் ஆண்டு சிறைச்சாலை மூடப்பட்டது.இந்நிலையில் தற்போது சிறைச்சாலையில் மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது கைதிகளை காண வருபவர்கள் தங்குவதற்கு ஏற்றவாறு ஹோட்டலாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment