Sunday, December 29, 2013

பாப்பரசரிடம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார் பஷர் அல்-ஆஸாத்!

தான் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆஸாத் முதலாவது பிரன்ஸிஸ் பாப்பரசருக்கு விசேட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

எதிர்வரும் சில மாதங்களில் தங்களது நாட்டின் சிவில் யுத்தம் தொடர்பில் சமாதான பேச்சுவார்த்தைநடாத்துவதற்கு ஆவன செய்யவுள்ளதாகவும் சிரிய ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார் என வெளிநாட்டுச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறாயினும், இக்கால கட்டத்தில் பிறநாடுகள் தங்கள் நாட்டு சிவில் யுத்தம் தொடர்பில் கருத்து வெளியிடாமலிருப்பது உகந்தது எனவும் சிரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியானது, சிரியாவின் அமைச்சர் ஜோசப் ஸ்வெய்ட் மற்றும் பாப்பரசரின் அரச செயலாளர் பேட்ரோ பரொடி இருவருக்குமிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போதே இச்செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment