வெலிகம கிரஸண்ட் பாலர் பாடசாலை வெள்ளிவிழா நாளை!
வெலிகம ஹெட்டிவீதியில் இயங்கிவரும் கிரஸண்ட் பாலர் பாடசாலையின் வெள்ளிவிழாவும், சிறுவர் நிகழ்வுகளும் நாளை (15) காலை 9 மணிக்கு வெலிகம நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் ஏ.ஜீ.எம். இஸ்மாயில், வெலிகம நகரபிதா எச்.எச். முஹம்மத் ஆகியோர் சிறப்பதிதிகளாகக் கலந்துகொள்வர்.
விசேட அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் குலஸிங்க வீரசேக்கர, தென் மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதனியா கலீல், செயற்றிட்ட அதிகாரி யஸவதீ கொனரா, செயற்றிட்ட அதிகாரி ஸ்ரீயாணி குணவர்த்தன, இலண்டன் ட்ரீ பவுண்டேஷனின் இலங்கைப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.எம். யெஹ்யா, அறபா தேசிய பாடசாலை அதிபர் ஜே.எஸ்.டப்ளியூ.ஏ. மௌலானா, வெலிகம – கப்புவத்தை அந்நூர் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஹிப்ளர், பதுர் பவுண்டேஷன் பணிப்பாளர் வழக்கறிஞர் எம்.யூ.எம். முன்திர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment