மெனிங் சந்தை சுற்றிவளைப்பு! 7500 கிலோகிராம் எதனோல் பழங்கள் மாட்டின!
எதனோல் இரசாயன பதார்த்தம் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 75 ஆயிரம் கிலோகிராமிற்கும் அதிகமான பழவகைகள் கொழும்பு மெனிங் சந்தையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த பழ வகைகள் கைப்பற்றப்பட்டன.
நூற்றுக்கும் அதிகமான வர்த்த நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் றூமி மர்ஷூக் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்டுள்ள பழங்களின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அரிசி மற்றும் கோழி இறைச்சி போன்றவற்றை நிர்னயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் குறித்தும் கூடுதலாக கவனம் செலுத்தப்படுவதாக றூமி மர்ஷூக் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment