மனநோயால் பாதிக்கப்பட்ட இளம் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியர் கைது! - தங்காலையில் சம்பவம்!
தங்காலையில் மனநோயால் பாதிக்கப்பட்ட 17 வயது யுவ தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன் னால் தங்காலை மெதகெடிய சுற்றுலா விடுதியில் மனநோ யால் பாதிக்கப்பட்டிருந்த 17 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற அவுஸ்திரேலியரையே தங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த அவுஸ்திரேலியர் மீண்டும் இலங்கைக்கு வருகைதந்து தங்காலை மெதகெடிய திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருப்பதாக பொலிஸிற்கு கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டு, தங்காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தங்காலை மேலதிக நீதவான் ரஞ்சன் விஜேசிங்க இவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment