பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் கூலிக்கு மாரடித்த கதை அம்பலம்! அம்பலம்! அம்பலம்!
பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூனின் கூட்டரசாங் கத்தின் பங்குதார அமைப்பான கன்ஸவேட்டிவ் கட்சிக்கும் டேவிட் கெமரூனுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியிருக்கும் இரகசியம் அம்பலமாகிள்ளது. இலங்கை யில் பிறந்த சுபாஷ்கரன் அல்லிராஜா என்பவர் பிரிட்டனின் தொலைபேசி நிறுவனமான "லைக்காமொபைல்" என்ற நிறு வனத்தை நிறுவி அதன் உரிமையாளராக இருந்து வருகி ன்றார்.
இந்த நிறுவனம் பிரிட்டிஷ் கன்ஸ வேட்டிவ் கட்சிக்கு ஆகக் கூடிய நிதி உதவி வழங்கும் இரண்டாவது நிறுவனம் என்றும் இந்த நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கியதனால் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கெமரூன் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் ஆணைக்கு அமைய இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சுபாஷ்கரன் அல்லிராஜா கன்ஸவேட்டிவ் கட்சிக்கு 4 இலட்சத்து 20ஆயிரம் பவுன்ஸ்ரேலிங்கை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் இதனைவிட இவர் இளவரசர் சாள்ஸ் மன்றத்திற்கு 20 மில்லியன் பவுன்ஸ்ரேலிங்கை விட அதிகமான நிதி உதவியை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விதம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு கடமைப்பட்டதனால் தான் பிரதமர் டேவிட் கெமரூன் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங் கைக்கு வந்திருந்த போது யாழ்ப்பாணத்திற்கும் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை அரசாங்கத் திற்கு எதிரான கண்டனக் குரலை அங்கு எழுப்பியதாகவும் சுபாஷ்கரனின் வேண்டு கோளுக்கு அமையவே டேவிட் கெமரூன் இவ்விதம் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டேவிட் கெமரூனின் யாழ்ப்பாண விஜயத்தை சுபாஷ்கரன் ஏற்படுத்திய கனா மன்றமே ஒழுங்கு செய்திருந்ததென்றும் இதன் மூலம் டேவிட் கெமரூனை இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கும் சுபாஷ்கரன் வற்புறுத்தி அதனை நிறைவேற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment