மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை!
மாதம்பே – வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த தனது மனைவியின் முதலாவது கணவரது 17 வயது பிள்ளையான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறித்த சிறுமிக்கு 2 வயதாக இருக்கும்போது தந்தை மரணமடைந்ததால் தாய் இரண்டாம் திருமணம் செய்திருந்துள்ளார்.
சம்பவம் குறித்து சிறுமி பொலிசாருக்கு தெரிவிக்கையில் தனது தாய் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த சமையம் தாயின் இரண்டாவது கணவர் தனது அறைக்கு வந்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வல்லுறவு புரிந்ததுடன் தனது தாய் இல்லாத சமையத்திலும் சிறியதந்தை தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியதை தொடர்ந்து சிறியதந்தையை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இதே சமயம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment