Tuesday, December 24, 2013

வட மாகாண பிரதம செயலாளருக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்: ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷூக்கு தொலைபேசி மூலம் இனந்தெரியாத நபர்களினால் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.


வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு தெரிவித்தே வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் கொலை அச்சுறுத்தல் விஜயலட்சுமி ரமேஷூக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இதனிடையே, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையே, மாகாணத்தில் ஆட்சியமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமோ எந்தவித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமலேயே வடக்கு மாகாண ஆளுநரினால், வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  December 25, 2013 at 8:53 AM  

Make use of your intelligence,catch those culprits and put them behind the bars.They try to bring back the same brutal culture to the stage.This is a kind of deadly alarm for the whole tamil society.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com