Wednesday, December 25, 2013

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நிருவாக, ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு


கிழக்கு மாகாணம் கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று 25.12.2013 புதன்கிழமை கே.சீ.டீ.ஏ.யின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது.

இந்த நிகழ்வில் பிரதம வளவாளராக வந்தாறுமூலை, கிழக்குப்பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி)கலந்து கொண்டு நிருவாக சபையின் பொறுப்புக்கள் எனும் தலைப்பில் செயலமர்வை நடாத்தியதடன் இந்நிகழ்வின் இறுதியில் கே.சீ.டீ.ஏ.யினால் பிரதேசத்தின் கல்வி மற்றும் பண்பாடுகள் தொடர்பான மகஜர்கள் கையளிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், மீராவோடை மீரா ஜிம்ஆ பள்ளிவாசல் நம்பிக்காயாளர் சபையின் தலைவருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களிடம் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் ஆசிரியரும், கே.சீ.டீ.ஏ.யின் ஆலோசகருமான ஜனாப் எம்.எச்.எம். ஹக்கீம் அவர்கள் மகயர் ஒன்றை கையளித்தார்.

இதைவிட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தரும், கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மது (காஸிமி) அவர்களிடம் மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் பிரதி அதிபரும், கே.சீ.டீ.ஏ.யின் ஆலோசகருமான ஜனாப் எம்.பீ. முபாறக் அவர்கள் மகஜர் ஒன்றை கையளித்தார்.

இறுதியாக கிழக்குப்பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஜமாஅத்தே இஸ்லாமியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி)அவர்களிடம் கே.சீ.டீ.ஏ.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாப் எம்.எம்.எம். பைறூஸ் அவர்கள் மகஜர்களையும் கையளித்தனர்.

No comments:

Post a Comment