திருமலையில் மீட்கப்பட்ட சடலம் யாருடையது? அடையாளம் காண உதவுவீர்! (படங்கள் இணைப்பு)
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் வாழைத்தோட்டம் பகுதியில் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்த சடலம் இதுவரை அடையளம் காணப்படவில்லை. இதனை அடையாளம் காண்பதற்காக குச்சவெளி பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தலையில் ஏற்படுத்தப்பட்ட காயத்தினால் முகம் சிதைவடைந்துள்ளது.
அவரின் நிலைக்கு ஏற்றவாறு பொலிஸாரால் அவரின் முகத்தை ஒத்ததாக படம் வரையப்பட்டுள்ளது.
இந்நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் குச்சவெளி பொலிஸாருடனோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தொடர்பினை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment