Sunday, December 22, 2013

பிரபாகரன் போல் பகல் கனவு காணும் விக்னேஸ்வரன்: திவயின

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் தற்பொழுது வடக்கில் பகல் கனவு காணும் ஒரே ஒரு நபர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் என திவயின வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.


மேலும் அந்தக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது முதலமைச்சராக பதவியேற்கும் முன் விக்னேஸ்வரன் பல கனவுகளை கண்டாலும் முதலமைச்சரான பின் அவர் காணும் கனவுகள் அலங்காரமானவையாக காணப்படுவதுடன் தற்போது விக்னேஸ்வரனின் புதிய கனவு வடக்கு மாகாணத்தில் இருந்து தேசியக் கொடியை நீக்குவதுதான் எனத் தெரிவித்துள்ளது.

இதன் ஒருகட்டமாக வடக்கில் நடைபெறும் எந்த அரச நிகழ்வுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை தடை செய்ய விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளதாகவும் தன்னுடைய இந்த தீர்மானம் தொடர்பில் அவரது தனது சகாக்களும் ஏற்கனவே அறிவித்து விட்டார் என்பதுடன் இதற்கு காரணம் இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் வாள் ஏந்திய சிங்கம் விக்னேஸ்வரனுக்கு பிரச்சினையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment