வவுனியா பொது வைத்தியசாலையில் தாடை, வாய், முக சத்திர சிகிச்சைக்கு புதிய பிரிவு!
வட மாகாண மக்களின் சுகாதார நலன்கருதி தாடை, வாய் மற்றும் முக சத்திர சிகிச்சை பிரிவொன்று வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று(12.12.2013) ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விசேட சிகிச்சை பிரிவில் சுமார் 30 வைத்திய அதிகாரிகள் கடமையாற்றுவதுடன் இன்று வரை 30 குழந்தைகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதன் பணிப்பாளரும் சத்திர சிகிச்சை நிபுணருமான ரஞ்சன் மல்லவ ஆரச்சி தெரிவித்தார்.
வாய், மூக்கு போன்ற அவயவங்களில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்துவதன் மூலம் சிறந்த பலனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியதுடன் இந்த சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment